


நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...
எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..
உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...
நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.
சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.
பாடல் பிரமாதமாக பதிவானது.
ஆனால் பாடலைக் கேட்ட போது,
டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?
என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.
ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...
எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.
சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.
பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !
அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.
காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....
yazhsudhakar@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
4 comments:
மிக நல்ல பாடல் அது.
நீங்கள் சொன்னது நூறு சதவீத உன்மை சார். வாழ்க உங்கள் பணி. தயவுசெய்து திரு,கே.எஸ்.ராஜா வின் குரலை எம்.பி3 அனுப்பமுடியுமா? அவர் குரலை நான் மிகவும் ஸ்வாஸ்த்தவன் நான் பாலு சாரின் ரசிகன் என்னோட மெயில் முகவரி : கோவை ரவீ
sir nall eludhureenga ..nandri ..ungalai thodarndhu padiththu varugiren..
30 வருட பாலுவின் சேவையை பாராட்டி சென்னையில் ஒரு
நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னது. இந்த பாடலைப்பற்றி
மேலும் ஒரு தகவல். இந்த பாடல் பதிவு செய்த நாள் அன்று இரவே
சென்னை வானோலி நிலையம் சுடச்சுட ஒலிப்பரப்பட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே சார்..
Post a Comment