Thursday, August 03, 2006

லேட்டாக வந்தாலும்....லேட்டஸ்டாக வரும் டி.எம்.எஸ்....




டி.எம்.எஸ் அவர்கள்.... இன்னொரு பாடகருடன் அல்லது பாடகியுடன் ஒரு பாடலைப் பாடும் போது.... இணைந்து பாடும் பாடகர் அல்லது பாடகி , பாடலின் பல்லவியை ஆரம்பித்த பிறகு டி.எம்.எஸ்.ஸின் குரல் ஒலிக்கின்ற பாடல்களை ரசிப்பது ஒரு ஆர்வம் கலந்த சுவையான அனுபவம்!

இப்படி அமையும் பாடல்களில் மற்றொரு பாடகர் அல்லது பாடகி பாடலை ஆரம்பித்து முடிக்கின்ற போது , டி.எம்.எஸ். பாடலைப் பாடத் துவங்குகிற இடம் கலகலப்பாக இருக்கும் அல்லது ஆர்ப்பாட்டமாக இருக்கும் .

'இதோ ... நான் வந்து விட்டேன்.....' என்பதை அவர் சொல்லாமல் சொல்லுவது போல அவரின் குரலில் தனித்துவமான ஒரு உற்சாகமும் அவருக்கே இயல்பான முத்திரைகளும் வந்து விழும்.

இந்த வகையில் அமைந்த சில பாடல்களை இப்போது பார்ப்போம்.

' இரு மலர்கள்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் கவிஞர் வாலி புனைந்த 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்ற பாடலை முதலில் பி.சுசீலா தான் ஆரம்பித்து வைப்பார்.

மிக இனிமை சொட்ட அந்தப்பாடலை அவர் ஆரம்பிப்பார்.

சுசீலா அவர்கள் 5 வது வரியைப் பாடி முடிந்ததும் ....
'தித்திக்கும் இதழ் உனக்கு ...என்றென்றும் அது எனக்கு' என்று டி.எம்.எஸ். பாட ஆரம்பிக்கும் போது ' தித்திக்கும் ' என்ற இடத்தில் தனியாக ஒரு 'குயில் முத்திரை பதித்து மொத்த காற்று மண்டலமுமே தித்திப்பதைப் போன்ற ஒரு பிரமையை ரசிக நெஞ்சங்களில் தோற்றுவிப்பார் .

இதே போல ' நாளை நமதே' படத்தில்.....' நாளை நமதே' என்ற பாடலை 'அன்பு மலர்களே நம்பி இருங்களே.. நாளை நமதே ' என்று எஸ்.பி.பி.தான் முதலில் துவங்கி வைப்பார்.

நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் எஸ்.பி.பி அவர்கள் அந்த பாடலை ஆரம்பிப்பார்.

அவர் பல்லவியைப் பாடி முடித்ததும் ஆர்ப்பாட்டமான ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .

அந்த இசையோடு கைகோர்த்துக் கொண்டே
'நாளை நமதே இந்த நாளை நமதே' என்று சொல்லிக் கொண்டே டி.எம்.எஸ் துள்ளி வரும் அழகு.... ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும் .

பரவசத்தில் மிதக்க வைக்கும் .

இவை போன்ற ஆர்வம் கலந்த ரசனைத் தன்மையைக் கிளர்ந்தெழச் செய்யும் மேலும் சில கீர்த்தி மிகு பாடல்களைப் பற்றி அடுத்த வாரமும் பார்ப்போம்...

------ ------ ------
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.


6 comments:

வெற்றி said...

யாழ் சுதாகர்,
நல்ல பதிவு. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

சுதாகர், நிங்க சொல்றது அத்தனையும் உண்மை. இன்றும் எப்போதாவது டி.எம்.எஸ் அவ்ர்களை பீச்சில் பார்க்கும்போது, இவர் நாம் வளர்ந்த வாழ்க்கையில்
ஒரு சுவையான மறக்கமுடியாத குரல் அல்லவா என்று.,தோன்றும்.
எவ்வளவு பாடல்கள்! நன்றி நல்ல பதிவு.

கோவை ரவீ said...

உன்னை சரண்னடைந்தேன் படத்தில் கூட நட்பு , நட்பு பாடல் நீங்கள் சொன்னவிதத்தில் எஸ்.பி.பி குரல் தனியாக தெரியும் -- கோவை ரவீ

Anonymous said...

You need to include the song sung by various singers in the movie KARNAN.

the song is Malai kodukkum kodaiyum oru 4 madam.

When TMS comes by the line "Thalaithongum uirgadkellam" is really a Simha Kural. His voice in this song is really a good example in this category.

Thanks
Ganesh

Anonymous said...

Ganesh's comment took my mind to the Rajageetham final programme in which TMS was conferred upon life-time achievement award by the Raj TV-brother-owners. The CD that I have has about 13 minutes of felicitation and every second is charged with emotions. Abdul Hameed, a man who weighs his words before uttering, perhaps gave TMS the greatest accolade one can ever get. He compared TMS to the Sun and the Only One TMS. Then TMS was led to the dias accompanied by the tune of that song in Karnan in which TMS, Sirgazhli, PBS and Loganathan sang. The lyric was very apt and sung with feeling by three of younger generation singers. I could see TMS savouring every word uttered by Hameed and his company. TMS deserved it. Thanks for providing an opportunity to relive the programme. Thanks again
K P Subramanian

இனியன் பாலாஜி said...

சரிதான் இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நிறைய பாடல் கள் இப்படித்தான்
பினனால் வந்து கணீரென்று தொடங்குவார்.
அவரது ஒரு பிறந்த் நாளன்று அவரது இல்லத்திற்கு செனறு அவருடன் ஒரு
புகைப்படம் எடுத்ததை பத்திரமாக வைத்திருக்கிறேன். எனக்கும் ஒரு mp3 copy அனுப்பிவையுஙளேன்
இனியன் பாலாஜி