Sunday, October 28, 2007

இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.ஜெயகிருஷ்ணாவின் குரல் பதிவு -1

இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'தாய் மடியில்'.

கே.ஜெயகிருஷ்ணாவின் குரலில்...விஜயராம்.ஏ.கண்ணனின் நெகிழ வைக்கும் படைப்பு.

நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.






கே.ஜெயகிருஷ்ணா பற்றி விஜயராம்.ஏ.கண்ணன் எழுதிய உருக வைக்கும் கட்டுரையைப் படிக்கவும்...கே.ஜெயகிருஷ்ணாவின் இளமைக் கால மற்றும் சம காலப் புகைப் படங்களைப் பார்க்கவும் இங்கே அழுத்துங்கள்.

கே.எஸ்.ராஜாவால் காற்றலைகளில் பரவிய பாடல்.


கே.எஸ்.ராஜா பற்றியும், இலங்கை வானொலியின் உன்னதங்கள் பற்றியும் விஜயராம் ஏ.கண்ணன் இலங்கை வானொலிக்கு அளித்த நேரடிப் பேட்டி. செவ்வி காண்பவர் நாக பூஷணி.


Saturday, October 27, 2007

இலங்கை வானொலியின் 'சிம்மக் குரலோன்' எஸ்.பி.மயில்வாகனனின் அபூர்வ புகைப்படம்



இணையத்தில் முதன் முதலாக இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனனின் படமும்...குரலும்...வர உதவியாக இருந்த 'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

- யாழ் சுதாகர்

எஸ்.பி.மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு...

அமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலி பரப்பில் தமது கம்பீரமான குரலால் உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான தமிழர்களையெல்லாம் ஈர்த்தவர் அறிவிப்பாளர் அமரர் எஸ்.பி.மயில்வாகனன் அவர்கள்.
1954 இல் இலங்கை வானொலியில் பணியாற்றத் துவங்கிய இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில் ஆற்றிய பணிகளும்...நிகழ்த்திய சாதனைகளும் இன்றுவரை எவராலும் நெருங்க முடியாதவை.
இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் இவர் புகழ்... பிரபல சினிமாக் கதாநாயகர்களுக்கு இணையாகப் பரவியது.
இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்திலே லட்சக்கணக்கான நேயர்கள் துடித்திருக்கிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர்கள்,பாடகர்கள், பாடகிகள் மட்டுமன்றி அந்தக் காலத்தின் முன்னணிக் கதா நாயகர்கள் பலரும் எஸ்.பி.மயில்வாகனனின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதை பழைய பத்திரிகைச் செய்திகளின் மூலம் அறிந்து வியக்க முடிகிறது.
1950 களிலும்...1960 களிலும் இவரது அறிவிப்பினால் அடையாளம் காட்டப்பட்டு புகழ் பெற்ற பாடல்கள் அதிகம்.பாடகர்கள்,இசையமைப்பாளர்கள் அதிகம்.
மயில்வாகனனின் புகைப் படத்தை ஒவ்வொரு இசையமைப்பாளனும்..பாடகனும்...தமது இல்லத்தில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என ...அந்தக் காலத்தின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


- யாழ் சுதாகர்

Sunday, September 30, 2007

எம்.ஜி.ஆரின் 'ஒளி விளக்கு' போட்டோ ஆல்பம் -பகுதி-1

'ஒளி விளக்கு'எம்.ஜி.ஆர் புகைப் படங்களின் தொகுப்பைக் காண இங்கே அழுத்துங்கள்.



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.


இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...


'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.


உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதமாக...


'வாழ்ந்தவர் கோடி...மறைந்தவர் கோடி...மக்களின் மனதில் நிற்பவர் யார்?'
'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்....ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று போற்றிப் புகழ வேண்டும்'.


'கற்றவர் சபையில் உனக்காகத் தனி இடமும் தர வேண்டும்...

உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் ...உலகம் அழ வேண்டும்.
நான் ஏன் பிறந்தேன்?'

'காலத்தை வென்றவன் நீ...காவியம் ஆனவன் நீ...'

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.'

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.'

[ 'ஒளி விளக்கு 'ஆல்பம் மேலும் தொடரும்]

Saturday, May 19, 2007

டி.எம்.எஸ் பாடல்களில் ராகங்கள்் பகுதி இரண்டு-யாழ் சுதாகர்









'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ் பாடிய, ராகங்களை அடிப்படையாகக் கொண்ட மேலும் சில பாடல்களை... இங்கே தந்திருக்கின்றேன் - யாழ் சுதாகர்



1. பல்லவன் பல்லவி பாடட்டுமே
படம் - கலங்கரை விளக்கம்
ராகம் - நீலாம்பரி

2. மோகனப் புன்னகை வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
படம் -
ராகம் - மோகனம்

3. அம்மானை அழகுமிகு கண்மானை
படம் - அவன் ஒரு சரித்திரம்
ராகம் - தர்மாவதி

4. ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
படம் - தாய்க்குப் பின் தாரம்
ராகம் - மோகனம்

5. ஆடவேண்டும் மயிலே
படம் - அருணகிரிநாதர்
ராகம் - பைரவி

6.கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா

ராகம் - ஆனந்தபைரவி

7. தேடி வந்தேனே புள்ளி மானே
படம் - மதுரைவீரன்
ராகம் - பைரவி

8. சிந்துநதிக்கரையோரம்
படம் - நல்லதோர் குடும்பம்
ராகம் - ஆபேரி

9. முகத்தில் முகம் பார்க்கலாம்
படம் - தங்கப்பதுமை
ராகம் - கல்யாணி

10. மதுரையில் பறந்த மின்கொடியை
படம் - 'பூவா தலையா?'
ராகம் - கல்யாணி

11. இசை கேட்டால் புவி அசைந்தாடும்
படம் - தவப்புதல்வன்
ராகம் - யமன் கல்யாணி

12. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
படம் - தெய்வமகன்
ராகம் - யமன் கல்யாணி

13. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
படம் - பாலும் பழமும்
ராகம் - மிஸ்ர சிவரஞ்சனி

14. நெஞ்சில் குடியிருக்கும்
படம் - இரும்புத்திரை
ராகம் - சண்முகப்பிரியா

15.முத்தைத் தரு
படம் - அருணகிரிநாதர்
ராகம் - சண்முகப்பிரியா

16. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
படம் - பொன்னூஞ்சல்
ராகம் - மத்தியமாவதி

17. தேன் மல்லிப்பூவே
படம் - தியாகம்
ராகம் - மோகனம்

18. வேலாலே விழிகள் ஆலோலம் இசைக்கும்
படம் - என்னைப் போல் ஒருவன்
ராகம் - மத்தியமாவதி

19. நீ எங்கே என் நினைவுகள் அங்கே
படம் - மன்னிப்பு
ராகம் - கமாஸ்

20.வெள்ளிக்கிண்ணம் தான் தங்கக் கைகளில்
படம் - உயர்ந்த மனிதன்
ராகம் - சங்கராபரணம்

21. சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
படம் -'பிராப்தம்'
ராகம் - மத்தியமாவதி

22. வாடாமலரே தமிழ்த்தேனே
படம் - அம்பிகாபதி
ராகம் - முகாரி

23. கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
படம் - சிவகங்கை சீமை
ராகம் - முகாரி

24. முல்லை மலர் மேலே
படம் - 'உத்தம புத்திரன்'
ராகம் - கானடா

25.அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
படம் - தீபம்
ராகம் - மாயமாளவ கௌளை

26.சொல்லடி அபிராமி
படம் - ஆதிபராசக்தி
ராகம் - மாயமாளவ கௌளை

27.கல்வியா ,செல்வமா ,வீரமா
படம் - 'சரஸ்வதி சபதம்'
ராகம் - மாய மாளவ கௌளை

28. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
படம் - நெஞ்சிருக்கும் வரை
ராகம் - மாய மாளவ கௌளை

29. பொன்னெழில் பூத்தது புதுவானில்
படம் - கலங்கரை விளக்கம்
ராகம் - பாகேஸ்ரீ

30. மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்கலாம்
படம் - அன்னை இல்லம்
ராகம் - பாகேஸ்ரீ

31. ஆடாத மனமும் உண்டோ
படம் - 'மன்னாதி மன்னன்'
ராகம் - லதாங்கி

32. அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ
படம் - பேசும் தெய்வம்
ராகம் - கானடா

33. கனவுகளே ஆயிரம் கனவுகளே
படம் - நீதிக்குத்தலை வணங்கு
ராகம் - கானடா

34.பாட்டும் நானே பாவமும் நானே
படம் - திருவிளையாடல்
ராகம் - கௌரி மனோகரி

35.பொன் ஒன்று கண்டேன்
படம் - படித்தால் மட்டும் போதுமா
ராகம் - பிருந்தாவன சாரங்கா

36.பாலும் பழமும் கைகளில் ஏந்தி
படம் - பாலும் பழமும்
ராகம் - ஆரபி

37.ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே
படம் - முதலாளி
ராகம் - ஆரபி

38. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
படம் - சதாரம்
ராகம் -சண்முகப்பிரியா

39.பூமாலையில் ஓர் மல்லிகை
படம் - ஊட்டி வரை உறவு
ராகம் - ஆபேரி

40.கொஞ்சநேரம் என்னை மறந்தேன்
படம் - சிரித்து வாழ வேண்டும்
ராகம் - யமன் கல்யாணி

41.பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே
படம் - தூக்குத்தூக்கி
ராகம் - மலயமாருதம்

42.காதலின் பொன் வீதியில்
படம் - பூக்காரி
ராகம் - ஹிந்தோளம்

43.மெல்லப்போ மெல்லப்போ
படம் - காவல்காரன்
ராகம் - சுத்த சாவேரி

44.உன்னைத் தானே
படம் - பறக்கும் பாவை
ராகம் - சிவரஞ்சனி

45. முத்துக்களோ கண்கள்
படம் - நெஞ்சிருக்கும் வரை
ராகம் - கரஹரப்பிரியா

46.மஹாராஜன் உலகை ஆளுவான்
படம் - கர்ணன்
ராகம் - கரஹரப்பிரியா

47.ஓமேரி தில்ரூபா
படம் - சூரியகாந்தி
ராகம் - கரஹரப்பிரியா

48.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
படம் - குங்குமம்
ராகம் - கானடா



'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Thursday, May 10, 2007

டி.எம்.எஸ். பாடல்களில் ராகங்கள் (பகுதி ஒன்று)




பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய... ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைக்கபப்ட்ட நெஞ்சில் நிறைந்த சில பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் -யாழ் சுதாகர்

1. கோபியர் கொஞ்சும் ரமணா
படம் - திருமால் பெருமை
ராகம் - தேஷ்

2. அம்மா பக்கம் வந்தா
படம் - எதிரிகள்ஜாக்கிரதை
ராகம் - சங்கராபரணம்

3. தொட்டால் பூ மலரும்
படம் - படகோட்டி
ராகம் - சுத்த தன்யாசி

4. நீயே உனக்கு என்றும் நிகரானவன்
படம் - பலே பாண்டியா
ராகம் - சுத்ததன்யாசி

5. அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடியெடுத்து...
படம் - காக்கும் கரங்கள்
ராகம் - மோகனகல்யாணி

6. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
படம் - நேற்று இன்று நாளை
ராகம் - பாகேஸ்ரீ

7. மணப்பாறை மாடு கட்டி
படம் - மக்களைப் பெற்ற மகராசி
ராகம் - சிந்து பைரவி

8. கல்யாண சாப்பாடு போடலாம் தம்பி கூடவா
படம் - மேஜர் சந்திரகாந்த்
ராகம் - சிந்துபைரவி

9. தெய்வத்தின் தேரேறி தேவியைத் தேடு ..தேவிக்குத்தூது செல்ல தென்றலே ஒரு
ராகம் - சக்கரவாகம்
படம் - பாட்டும் பரதமும்

10. திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
படம் - தெய்வம்
ராகம் - மோகனம்

11. அமைதியான நதியினிலே ஓடும்
படம் - ஆண்டவன் கட்டளை
ராகம் - ஹரிகாம்போதி

12. யார் தருவார் இந்த அரியாசனம்
படம் - மஹாகவி காளிதாஸ்
ராகம் - அடானா

13. அறுமனமே ஆறு
படம் - ஆண்டவன் கட்டளை
ராகம் - சிந்துபைரவி

14. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
படம் - திருவருட்செலவர்
ராகம் - சிந்துபைரவி

15. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
படம் - பாலும் பழமும்
ராகம் - சிந்து பைரவி

16. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
படம் - பட்டணத்தில் பூதம்
ராகம் - பீலு

17. நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்
படம் - பூவும் பொட்டும்
ராகம் - பீலு

18. காதுகொடுத்துக் கேட்டேன்
படம் - காவல்காரன்
ராகம் - ஆனந்த பைரவி

19. முத்துக்குளிக்க வாரீகளா
படம் - அனுபவி ராஜா அனுபவி
ராகம் - ஹரிகாம்போதி

20.அன்பு நடமாடும் கலைகூடமே
படம் - அவந்தான் மனிதன்
ராகம் - வாஸந்தி

21. பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்துப் பார்த்த கிளி
படம் - கௌரவம்
ராகம் - திலங்கு

22. ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி
படம் - குலமகள் ராதை
ராகம் - செஞ்சுருட்டி

23. ஒளிமயமாக எதிர்காலம்
படம் - பச்சை விளக்கு
ராகம் - செஞ்சுருட்டி

24. நிலவு ஒரு பெண்ணாகி
படம் - உலகம் சுற்றூம் வாலிபன்
ராகம் - செஞ்சுருட்டி

25. பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ
படம் - சிரித்து வாழவேண்டும்
ராகம் - செஞ்சுருட்டி

26. சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
படம் - சந்திரோதயம்
ராகம் - பெஹாக்

27. உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
படம் - நான் ஏன் பிறந்தேன்

28. அன்றொரு நாள் இதே நிலவில்
படம் - நாடோடி
ராகம் - தேஷ்

29. நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
படம் - மதுரை வீரன்
ராகம் - சாருகேசி

30. வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே
படம் - சாரங்கதாரா
ராகம் - சாருகேசி

31. மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
படம் - பிள்ளையோ பிள்ளை
ராகம் - சாருகேசி


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Friday, January 26, 2007

TMS AND YAZH SUDHAKAR








ஸ்ரீதர் அவர்கள் இயக்கி , மெல்லிசை மன்னர் இசையமைத்த 'சிவந்த மண்' படத்தில் "ஒரு நாளிலே ...என்னவாம்...உறவானதே..." என்ற மென்மையான பாடலை நீங்கள் ரசித்திருக்கலாம்.

அந்த மெட்டின் மென்மை , டி.எம்.எஸ்ஸின் கம்பீரமான குரலின் தன்மையோடு இணைந்து வருமோ என்ற சந்தேகத்தில் ..அந்தப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவையே பாட வைத்து பதிவு செய்தார்கள்

ஆனால் பாலமுரளி கிருஷ்ணா மிகவும் கீழ் ஸ்தாயில் அந்தப் பாடலைப் பாடியிருந்ததால் நடிகர் திலகம் அதை விரும்பவில்லை.

டி.எம்.எஸ். அவர்களையே பாடவையுங்கள் .

எந்த அளவுக்கு மெட்டுக்கு ஈடுகொடுத்துப் பாடமுடியுமோ அந்த அளவுக்குப் பாட வையுங்கள்... போதும் என்று சொல்லி விட்டார் நடிகர் திலகம்.

டி.எம்.எஸ்ஸை வரவழைத்து அந்தப் பாடலின் மெட்டின் மென்மை பற்றிக் கூறி அவரைப்பாட வைத்தார் எம்.எஸ்.வி.

மெட்டின் மென்மைக்கு மேலும் மென்மை சேர்ப்பது போல சர்வசாதாரணமாக 'பூப்போல' அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்க்டு விட்டுப் புறப்பட்டார்.டி.எம்.எஸ்.

சிவந்த மண் படத்தில் இன்றும் அந்தப் பாடல் மக்கள் மனங்களில் நிறைந்து நிற்கும் பாடலாகத் திகழ்கிறது.

நடிகர் திலகம் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்த 'தெய்வமகன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனை படல்களும் சூப்பர் ஹிட்.

பக்திப் பரவசத்துடன் அவர் பாடிய 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ,'

சிருங்கார ரசம் மிளிர அவர் பாடிய 'காதல் மலர் கூட்டம் ஒன்று ' அன்புள்ள நண்பரே ... ஹோ... அழகுப் பெண்களே ', 'காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்'

பெற்றோரின் பாச்த்துக்காக ஏங்கும் ஏகக்த்தை உணர்வுப் பிரவாகத்துடன் பிழியப் பிழியச் சொன்ன 'தெய்வமே தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே ' போன்ற பாடல்கள் 'தெய்வமகன் ' படத்தில் டி.எம்.எஸ்ஸின் குரல் வித்துவத்தின் வித்தியாசமான பரிமாணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின.

இந்த 'தெய்வமகன்' படத்தை தெலுங்கில் 'கோட்டீஸ்வரரு' என்ற பெயரில் தயாரித்தார்கள்.

தெய்வமகனில் டி.எம்.எஸ் பாடிய பாடல்களை அதே உணர்வுடன் , வீச்சுடன் பாடும் பாடகர்கள் தெலுங்குப் பாடல்களையும் டி.எம்.எஸ்ஸோ பாட வைத்தார்கள்.

கோடீஸ்வரரு படத்திற்காக டி.எம்.எஸ் பாடிய நேலயை சுக்கலச்சூடு ', கம்மனி ஹாப்பிடே' தெய்வமா தெய்வமா ஆகிய பாடல்கள் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது.

நடிகையர் திலகம் சாவித்திரி பிராப்தம் என்ற படத்தைத் தாயாரித்தார். நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் 'தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்... வெகு நாளாக என் ஆசை சின்னம்மா' என்ற பாடலின் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது.

டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருந்த போது ...அந்த பாடலின் சரணத்தை அவர் பாடி நிறுத்தியதும் அந்த இடத்தில் ...'கண்ணா' என்றூ உணர்வுபூர்வமாக சாவித்திரி அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு வார்த்தைக்கு குரல் கொடுபப்தற்காக அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்.

டி.எம் .எஸ் பாடலை உச்சக்கட்டத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது ... அந்த இடைவெளியில் ..சாவித்திரி 'கண்ணா' என்று நெகிழ்வாக , சோகம் ததும்ப குரல் கொடுத்தார்.

அதற்குப் பிறகு டி.எம்.எஸ். பாடலைத் தொடர்வார்.

இந்தப் பாடல் டி.எம்.எஸ்ஸூக்கு பெரும் பாரட்டுகளை பெற்றுத்தந்தது.

சாவித்திரியிடம் இந்தப் பாடலைபற்றிப் பேசும் போது டி.எம்.எஸ் சொன்னார்.

பாடலின் நடுவில் 'கண்ணா' என்று நீங்கள் உருகாத வரையும் உருக வைக்கும் குரலில் அழைத்தீர்களே...?அந்த உருக்கமும் நெகிழ்வும் தான் இன்னும் சிறப்பாக அந்தப் பாடலைப் பாடவைத்தது.

உடனே சாவித்திரி சிரித்துக் கொண்டே சொன்னார்.
" பாடலை நீங்கள் பாடிய பாவமும் ,உங்கள் குரலில் தெரிந்த அந்த உணர்வும் தான் அன்னை அப்படி உருக்கமாக 'கண்ணா';என்ற வார்த்தையைச் சொல்லவைத்தது.

டி.எம்.எஸ்ஸின் அபூர்வமான இளமைக்காலப் புகைப்படங்களையும் 'கல்லும் கனியாகும்'அருணகிரிநாதர்', பட்டினத்தார்' படங்களில் அவர் நடித்த காட்சிகளையும் தந்தை பெரியார் , கலைஞர் , எம்.ஜி.ஆர். ராஜ்கபூர் மற்றும் பிரபலங்களுடன் டி.எம்.எஸ் இருக்கும் படங்களையும் பார்க்க....

- யாழ் சுதாகர்