Friday, January 26, 2007

TMS AND YAZH SUDHAKAR








ஸ்ரீதர் அவர்கள் இயக்கி , மெல்லிசை மன்னர் இசையமைத்த 'சிவந்த மண்' படத்தில் "ஒரு நாளிலே ...என்னவாம்...உறவானதே..." என்ற மென்மையான பாடலை நீங்கள் ரசித்திருக்கலாம்.

அந்த மெட்டின் மென்மை , டி.எம்.எஸ்ஸின் கம்பீரமான குரலின் தன்மையோடு இணைந்து வருமோ என்ற சந்தேகத்தில் ..அந்தப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவையே பாட வைத்து பதிவு செய்தார்கள்

ஆனால் பாலமுரளி கிருஷ்ணா மிகவும் கீழ் ஸ்தாயில் அந்தப் பாடலைப் பாடியிருந்ததால் நடிகர் திலகம் அதை விரும்பவில்லை.

டி.எம்.எஸ். அவர்களையே பாடவையுங்கள் .

எந்த அளவுக்கு மெட்டுக்கு ஈடுகொடுத்துப் பாடமுடியுமோ அந்த அளவுக்குப் பாட வையுங்கள்... போதும் என்று சொல்லி விட்டார் நடிகர் திலகம்.

டி.எம்.எஸ்ஸை வரவழைத்து அந்தப் பாடலின் மெட்டின் மென்மை பற்றிக் கூறி அவரைப்பாட வைத்தார் எம்.எஸ்.வி.

மெட்டின் மென்மைக்கு மேலும் மென்மை சேர்ப்பது போல சர்வசாதாரணமாக 'பூப்போல' அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்க்டு விட்டுப் புறப்பட்டார்.டி.எம்.எஸ்.

சிவந்த மண் படத்தில் இன்றும் அந்தப் பாடல் மக்கள் மனங்களில் நிறைந்து நிற்கும் பாடலாகத் திகழ்கிறது.

நடிகர் திலகம் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்த 'தெய்வமகன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனை படல்களும் சூப்பர் ஹிட்.

பக்திப் பரவசத்துடன் அவர் பாடிய 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ,'

சிருங்கார ரசம் மிளிர அவர் பாடிய 'காதல் மலர் கூட்டம் ஒன்று ' அன்புள்ள நண்பரே ... ஹோ... அழகுப் பெண்களே ', 'காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்'

பெற்றோரின் பாச்த்துக்காக ஏங்கும் ஏகக்த்தை உணர்வுப் பிரவாகத்துடன் பிழியப் பிழியச் சொன்ன 'தெய்வமே தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே ' போன்ற பாடல்கள் 'தெய்வமகன் ' படத்தில் டி.எம்.எஸ்ஸின் குரல் வித்துவத்தின் வித்தியாசமான பரிமாணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின.

இந்த 'தெய்வமகன்' படத்தை தெலுங்கில் 'கோட்டீஸ்வரரு' என்ற பெயரில் தயாரித்தார்கள்.

தெய்வமகனில் டி.எம்.எஸ் பாடிய பாடல்களை அதே உணர்வுடன் , வீச்சுடன் பாடும் பாடகர்கள் தெலுங்குப் பாடல்களையும் டி.எம்.எஸ்ஸோ பாட வைத்தார்கள்.

கோடீஸ்வரரு படத்திற்காக டி.எம்.எஸ் பாடிய நேலயை சுக்கலச்சூடு ', கம்மனி ஹாப்பிடே' தெய்வமா தெய்வமா ஆகிய பாடல்கள் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது.

நடிகையர் திலகம் சாவித்திரி பிராப்தம் என்ற படத்தைத் தாயாரித்தார். நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில் 'தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்... வெகு நாளாக என் ஆசை சின்னம்மா' என்ற பாடலின் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது.

டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருந்த போது ...அந்த பாடலின் சரணத்தை அவர் பாடி நிறுத்தியதும் அந்த இடத்தில் ...'கண்ணா' என்றூ உணர்வுபூர்வமாக சாவித்திரி அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு வார்த்தைக்கு குரல் கொடுபப்தற்காக அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார்.

டி.எம் .எஸ் பாடலை உச்சக்கட்டத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது ... அந்த இடைவெளியில் ..சாவித்திரி 'கண்ணா' என்று நெகிழ்வாக , சோகம் ததும்ப குரல் கொடுத்தார்.

அதற்குப் பிறகு டி.எம்.எஸ். பாடலைத் தொடர்வார்.

இந்தப் பாடல் டி.எம்.எஸ்ஸூக்கு பெரும் பாரட்டுகளை பெற்றுத்தந்தது.

சாவித்திரியிடம் இந்தப் பாடலைபற்றிப் பேசும் போது டி.எம்.எஸ் சொன்னார்.

பாடலின் நடுவில் 'கண்ணா' என்று நீங்கள் உருகாத வரையும் உருக வைக்கும் குரலில் அழைத்தீர்களே...?அந்த உருக்கமும் நெகிழ்வும் தான் இன்னும் சிறப்பாக அந்தப் பாடலைப் பாடவைத்தது.

உடனே சாவித்திரி சிரித்துக் கொண்டே சொன்னார்.
" பாடலை நீங்கள் பாடிய பாவமும் ,உங்கள் குரலில் தெரிந்த அந்த உணர்வும் தான் அன்னை அப்படி உருக்கமாக 'கண்ணா';என்ற வார்த்தையைச் சொல்லவைத்தது.

டி.எம்.எஸ்ஸின் அபூர்வமான இளமைக்காலப் புகைப்படங்களையும் 'கல்லும் கனியாகும்'அருணகிரிநாதர்', பட்டினத்தார்' படங்களில் அவர் நடித்த காட்சிகளையும் தந்தை பெரியார் , கலைஞர் , எம்.ஜி.ஆர். ராஜ்கபூர் மற்றும் பிரபலங்களுடன் டி.எம்.எஸ் இருக்கும் படங்களையும் பார்க்க....

- யாழ் சுதாகர்