Thursday, May 25, 2006

பாடல்களில் எதிர்மறை வரிகளைத் தவிர்த்த எம்.ஜி.ஆர்...






'வானம்பாடி' படத்தில்..டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க

தனது பாடல் வரியில் கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல...

'சங்கே முழங்கு' படப் பாடலிலும்

எம்.ஜி ஆரின் திருப்திக்காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.

'நாலு பேருக்கு நன்றி...அந்த நாலு பேருக்கு நன்றி...

தாயில்லாத அனாதைக்கெல்லாம்

தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்

அந்த நாலு பேருக்கு நன்றி..'

என்று கவியரசர் எழுதிய பாடலில் வரும்

கடைசி சரணத்தில்....

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்

வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

போகும் போது வார்த்தை இல்லை...

போகு முன்னே சொல்லி வைப்போம்...'

என்று முடித்திருந்தார்.


'போகும் முன்னே சொல்லி வைப்போம்..'என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றலாமே... என்று எம்.ஜி.ஆர்..அபிப்பிராயப்பட்டார்.

உடனே கவியரசர்..அந்த சரணத்தை..சிறு மாற்றங்களுடன்...'

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றிப் போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...'

என்று எழுதிக் கொடுக்க...மக்கள் திலகத்தின் முகத்தில்...பரம திருப்தி.

தனது பாடல்களில்...வலிமையான எதிர் மறை வார்த்தைகள்...

அல்லது அறச் சொற்கள் வருவதைஎம்.ஜி.ஆர் தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு...இந்த சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

1 comment:

குமரன் (Kumaran) said...

உண்மை உண்மை. டி.எம்.எஸ். ஒரு தலை ராகம் படத்தில் ஒரு எதிர்மறைப் பாடலைத் தான் பாடிய பின்னரே தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன்.