Thursday, July 27, 2006

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் '....ஜேசுதாஸ்



தெருவில் உள்ள தேனீர் கடைகளில் வானொலிப் பெட்டிகளில் திரைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

சிறுவனாக இருந்த போது ஜேசுதாஸ்...அந்தத் தேனீர் கடைகளின் பக்கம் நீண்ட நேரம் கால் கடுக்க நின்று வானொலியில் இருந்து வரும் பாடல்களை எல்லாம் ரசித்து விட்டு தாமதமாக பள்ளிக்குப் போவாராம்.

இதனால்...இசை தவிர்ந்த மற்றப் பாடங்களில் அவர் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற முடிந்தது.

ஜேசுதாஸின் ஐந்தாவது வயது முதல் பள்ளியில் அவர் கலந்து கொண்ட அத்தனை இசைப் போட்டிகளிலும் அவருக்குத் தான் முதற் பரிசு கிடைத்தது.

எல்லா வருடங்களிலும்...எல்லா இசைப் போட்டிகளிலும் அவர் ஒருவரே பரிசுகளைத் தட்டிச் சென்றதால்...தலைமை ஆசிரியர் யோசித்துப் பார்த்தார்.

ஜேசுதாஸை தமது..இருப்பிடத்துக்கு வரவழைத்து....'இது வரை நீ பங்கு பற்றிய எல்லாப் போட்டிகளிலும் முதற் பரிசுகளைத் தட்டிச் சென்று விட்டாய்.சந்தோஷமாகத் தான் இருக்கிறது...

ஆனால்...புதியவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஆகவே இனிமேல் இந்தப் பள்ளிக்குள் நடை பெறும் இசைப் போட்டிகள் எதிலும் நீ கலந்து கொள்ளாதே.

ஆனால்..பள்ளிக்கு வெளியே நடக்கும் இசைப் போட்டிகளில் நீ தாராளமாகக் கலந்து கொள்ளலாம்..என்றாராம்.

தலமை ஆசிரியர் சொல்வதில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அன்று முதல் ஜேசுதாஸ் பள்ளியில் நடந்த எந்த ஒரு இசைப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பின்னாளில் தொடர்ந்து பல வருடங்கள்...யாருக்குமே விட்டு வைக்காமல் ஜேசுதாஸ் தேசிய விருது உட்பட பல உயர்ந்த விருதுகளைத் தட்டிக்கொண்டது சங்கீத சரித்திரத்தில் இன்றும் முறியடிக்கப் பட முடியாத 'அசுர ' சாதனை.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் ' என்பதற்கு...ஜேசுதாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

1 comment:

சின்னக்குட்டி said...

தமிழ் சினிமாவில் அறிந்திராத நல்ல விசயங்களை தனது பதிவுகளில் தரும் யாழ் சுதாகருக்கு வாழ்த்துக்கள்..

சூரியன் fm இல் உங்கள் இரவு நேர அறிவுப்பாளாராக வரும் நீங்கள் ......விடை பெறும் போது... யாழ் சுதாகர் என்றதை யாழப்பாணம் சுதாகரென்று மாற்றிவிட்டீங்கள்... ஏனுங்க...